Tutorial Link Click Here

ஈராக்கில் இருந்து அமெரிக்கா உடனடியாக வெளியேறவேண்டும்: ஈராக் அறிவிப்பு… துரோகம் செய்து விட்டீர்கள்

ஈராக் நாட்டில் உள்ள அனைத்து அமெரிக துருப்புகளும் உடனடியாக வெளியேறவேண்டும் என அன் நாட்டின் மூத்த தலைவர்கள் ஒன்றினைந்து கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஈராக் நாட்டு பாராளுமன்றம் இதனை சற்று முன் அங்கிகரித்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. ( Iraq has called for the expulsion of all US troops from its soil)ஈரான் நாட்டின் தளபதியை ஈராக்கிற்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்துங்கள் என்று அறிவுரை கூறிவிட்டு.

மறு புறத்தில் அந்த தளபதி மீது தாக்குதல் நடத்தி அவரை கொலை செய்துள்ளது அமெரிக்கா. இதனை தாம் மன்னிக்கப் போவது இல்லை என்று ஈராக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். இன் நிலையில், அமெரிக்கா நேரடியா ஈரான் மீது யுத்தத்தை தொடுக்காது என்றும். அதுபோல ஈரான் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தாது என்றும் பிரித்தானிய முன் நாள் பாதுகாப்பு அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார். ஆனால் ஈரான் பழிவாங்க வேறு முறைகளை கையாளும், எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது பிறிதொரு நாட்டில் வைத்து, இதே பாணியில் அமெரிக்க ராணுவ தளபதி அல்லது அதிகாரி ஒருவரை ஈரான் நிச்சயம் தாக்கி அழிக்கும் என்று கூறப்படுகிறது. காரணம் என்னவென்றாக், தற்போது அமெரிக்க போர் கப்பல் மட்டும் அல்ல. பிரித்தானிய போர் கப்பல் 2 வளை கூடாவில் ஈரானுக்கு அருக்கே உள்ளது.

ஈரானில் உள்ள 52 நகரங்களை தாம் குறிவைத்துள்ளதாக கூறும் அமெரிக்கா, மற்றுமொரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால். ஈரானில் உள்ள புராதன சின்னங்களையும். பழமை வாய்ந்த நூலங்கள், அருங்காட்சி மையங்களையும் தாக்க திட்டமிட்டுள்ளது என்பது தான். இதனூடாக ஈரானின் தொன்மையை மற்றும் பாரம்பரியத்தை அழிக்க அமெரிக்கா தயார் என்பதனை அமெரிக்கா உணர்த்தியுள்ளது.(Donald Trump has said the US will target 52 sites, including cultural landmarks, in Iran if the country retaliates.) வரலாற்று சிறப்பு மிக்க சில இங்களை, உலக யுனஸ்கோ நிறுவனம பாதுகாப்பு இடமாக அறிவித்து. பாதுகாத்து வருகிறது. ஆனால் தனை கூட தாக்க அமெரிக்கா திட்டம் தீட்டியுள்ளது என்பது, அனைவரையும் வெட்க்கப்பட செய்யும் செயலாக உள்ளது. ஒரு இனத்தின் தொன்மையை அழிக்க, அமெரிக்கா முற்படுகிறது.

இது யாழ் நூலகம் எரிக்கப்பட்ட விடையத்தை எமக்கு நினைவூட்டுகிறது. போர் என்று வந்தால், ராணுவ கேந்திர நிலையங்களை தாக்கலாம். ஆனால் தீவிரவாதிகள் போல தொல்பொருட்களை தாக்க முற்படுவது ஏன் என்ற கேள்வி இங்கே எழுகிறது அல்லவா ?