இனி இப்படியும் மொபைல் Recharge செய்யலாம்.. புதிய வசதியை அறிமுகப்படுத்தும் Google!

இனி இப்படியும் மொபைல் Recharge செய்யலாம்.. புதிய வசதியை அறிமுகப்படுத்தும் Google!

நாட்டில் சுமார் 110 கோடி மொபைல் இணைப்புகள் உள்ளன. இவற்றில் 95% இணைப்புகள் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளைக் கொண்டுள்ளது.மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்யும் வேலையை எளிமையாக்க புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது கூகுள்.

தனது திறன்களை மேம்படுத்தும்முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கூகுள் நிறுவனம், தற்போது இந்தியாவில் Google Search மூலம் மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய வசதி குறித்தும், எப்படி இதை பயன்படுத்தலாம் என்பது குறித்தும் தற்போது காணலாம்.

புதிய வசதியின் அம்சங்கள்:

பயனர்கள் தேர்வு செய்யும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் Recharge Plan-களை ஒருசேர பார்க்கும் வசதி, அதற்கு digital wallet-களில் வழங்கப்படும் சலுகைகளை ஒப்பிட்டு கொள்ளும் வசதி, பின் மொபைல் ப்ரீபெய்ட் எண்களை ரீசார்ஜ் செய்து கொள்ளவதற்கு என இனி இந்திய பயனர்களுக்கு கூகுள் உதவ உள்ளது.

யாருக்கு..?:

இந்த புதிய வசதி Android சாதனங்களில் Google கணக்குகளில் உள்நுழைந்த பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதில் ஏர்டெல், வோடபோன்-ஐடியா, ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் மற்றும் அவற்றுக்கான சலுகை விவரங்கள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தரவுகள் பயனர்களுக்கு காட்டப்படும்.

எப்படி பயன்படுத்தலாம்:

Google Search-ல் சென்று prepaid mobile recharge அல்லது SIM recharge போன்ற Recharge சம்பந்தமான Key Words-களை டைப் செய்தால், முடிவில் வரும் Result-ல் மொபைல் எண், ஆப்பரேட்டர் மற்றும் வட்டம் உள்ளிட்ட தகவல்களை பயனர்களை நிரப்ப சொல்லி கேட்கும். அதை நிரப்பிவிட்டால் பின்னர் Browse plans ஆப்ஷன் மூலம் குறிப்பிட்ட தொலைத்தொடர்பு ஆப்பரேட்டரால் கிடைக்கும் எல்லா ப்ரீபெய்ட் ப்ளான்களையும் கூகுள் காட்டும். அதிலிருந்து பயனர்கள் தங்களுக்கு தேவைப்படும் ப்ளானை தேர்வு செய்து கொள்ளலாம்.

mobile recharge

சலுகை ஒப்பீடு மற்றும் ரீசார்ஜ்:

பின்னர் மொபைல் கட்டண சேவை வழங்குநர்களான Mobikwik, Paytm, FreeCharge மற்றும் Google Pay உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கும் Recharge சலுகைகள் பயனர்களுக்கு ஒருங்கிணைத்து காட்டப்படும். அதிலிருந்து தாங்கள் விரும்பும் மற்றும் பயன்படுத்தும் சேவைகளை கொண்டு, சிறந்ததை தேர்வு செய்து Recharge செய்து கொள்ளலாம்.

பயனர்கள் தங்கள் மொபைல் எண்களை மட்டுமின்றி, தங்களுக்கு வேண்டியவர்களின் எண்களையும் கூகுளின் புதிய வசதி மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். பண பரிவர்த்தனையை முடித்த பின்னர் தோன்றும் confirmation page, பயனரை மீண்டும் Google Search-க்கு திருப்பும் வகையில் Back to Google ஆப்ஷனை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

indian mobile

விரைவில் கூகுளின் இந்த புதிய வசதியில், மேலும் பல மொபைல் ஆப்பரேட்டர்கள் மற்றும் மொபைல் கட்டண சேவை தளங்கள் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

google map, mobile phone, road trafic Views: 232
Post by Nivetha             
profile photo Nivetha

கூகுள் மேப்பையே திணறடித்தவர்

'99 ஸ்மார்ட் போன்களில், ஒரே நேரத்தில் கூகுள்மேப் செயலியை ஓபன் செய்த ஜெர்மானியர் ஒருவர், எல்லா மொபைல் போன்களையும், ஒரு ...

Mosquitoes,  Lilac Aldigite Views: 220
Post by Nivetha             
profile photo Nivetha

கொசுக்களை மடக்க உதவும் பூக்கள்!

அதிகபட்சம் எட்டு வாரமே உயிர் வாழ்பவை கொசுக்கள். இதில் ஆண் கொசு மனித ரத்தத்தை குடிப்பதில்லை. பெண் கொசுக்களும், இனப் ...

tamil police,sri lanka police,kotapaya,natinal day video news alert Views: 310
Post by Kandeepan             
profile photo Kandeepan

இலங்கையில் தமிழர்களுக்கு பொலிஸ் அதிகாரம்?; கோட்டா வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கையின் வடபகுதியில் சேவையாற்றுவதற்காக 2000 தமிழ் பொலிஸார் நியமிக்கப்படவுள்ளனர். இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று சுதந்திர ...

sivasooriyalingam staneyjeeva,bobigny elections municipales photo news alert Views: 526
Post by Bobigny             
profile photo Bobigny

பொபினி (Bobigny) மாநகராட்சி தேர்தல் 2020

பொபினியில் (Bobigny) மாநகராட்சி தேர்தல் வரும் 15 மார்ச் 2020, முதற்சுற்றும் 22 மார்ச் 2020 இரண்டாவது சுற்றும் நடைபெறவுள்ளது. இத் ...

Juice Jacking,Public Charging Point,charger hacking,publick hack photo news alert Views: 239
Post by Anitha             
profile photo Anitha

மொபைலை Charge செய்வதால் கூட நிகழும் Cyber Attack.. தவிர்ப்பது எப்படி..?

நகை, பணம் திருட்டை போல தகவல்கள் திருட்டு மற்றும் சைபர் அட்டாக் மிக பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. பல ...

elepant story, Who is great Views: 266
Post by Kandeepan             
profile photo Kandeepan

'யார் பெரியவன்' முகலன் யானையும், மாரி பன்றியும் - இரண்டு நிமிட கதை!

மனிதர்களின் முன்னெற்றத்துக்கு பெரிய இடைஞ்சலாக இருப்பது நான் பெரியவனா, இல்லை நீ பெரியவனா என்ற மனோபாவம். பெரிய அரசர்கள் முதல் ...